நாமக்கல் இ பி காலனி தெருவை சேர்ந்தவர் லாரி அதிபர் பழனிச்சாமி வயசு 55,இவரது மனைவி பூங்கொடி இவர் தையல் கடை நடத்தி வருகிறார் பழனிச்சாமி வேலை நிமித்தமாக வெளியே சென்று விட்டதால் அவரது மனைவி பூங்கொடி வீட்டின் கதவை பூட்டிவிட்டு தையல் கடைக்கு சென்று விட்டார்.மாலை நான்கு முப்பது மணி அளவில் அவர் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்புறத்தில் உள்ள பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு பூங்கொடி அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கபோர்ட்டில் வைக்கப்பட்டிருந்த 19 பவுன் நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் நாமக்கல் போலீசில் புகார் செய்தார் புகாரின் அடிப்படையில் நாமக்கல் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், பட்டப்பகலில் திருட்டு சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
