பிரபல நடிகர் விஜயகாந்த் தனது வீட்டில் வெள்ளைக் கிளி ஒன்றை வளர்த்து வந்தார். அது, 'கேப்டன்.. கேப்டன்..' என அவரையே சுற்றி வரும். இதனால் அதற்கு 'கேப்டன்' என்று விஜயகாந்த்தே பெயர் சூட்டினார். இந்நிலையில் விஜயகாந்த் மறைந்ததையடுத்து, அவருடைய உருவப்படம் வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த படத்தை சுற்றி சுற்றி வந்த கிளி, அவருக்கு அஞ்சலி செலுத்துவது போல் அமர்ந்துள்ளது. இந்த படம் தற்போது வைரலாகிறது.
