ஜப்பான் ஷிட்டோ-ராய் கராத்தே -டு இந்தியா அகில இந்திய கராத்தே போட்டி!

sen reporter
0


 வேலூர்:

வேலூர் டோல்கேட் நாதன் பேலஸ் திருமண மண்டபத்தில் ஜப்பான் ஷிட்டோ-ராய் கராத்தே- டு இந்தியா அகில இந்திய கராத்தே போட்டி நடந்தது. காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த அகில இந்திய கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என பல்வேறு நிலைகளில் போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வேலூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஜப்பான் ஷிட்டோ-ராய்- கராத்தே -டு இந்தியா பள்ளியின் 47 ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு இந்த அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. கராத்தே சாம்பியன் தேர்வு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு கொடைவள்ளல், கல்வித்தந்தை, விளையாட்டு வீரர்களின் ஒளி விளக்கு என்று அழைக்கப்படும் ஏ. சி. எஸ். கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஏ.சி. சண்முகம் கலந்து கொண்டு தலைமை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் சிறப்பு விருந்தினராக பிரண்ட்ஸ், கத்தி படங்கள் புகழ் மற்றும் திரைப்படம்,  டி.வி. முன்னணி  நடிகை அனு கிருஷ்ணா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பரிசு வழங்கி பேசிய ஏ.சி. சண்முகம்,  கராத்தே போட்டி மாணவ, மாணவிகளுக்கு உடலில் வலுவை ஏற்படுத்துவதோடு, ஒரு தற்காப்பு கலையாகவும் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உற்ற துணையாக இருக்கும். இவ்வாறு கராத்தே போட்டியில் கலந்து கொள்ள தங்களது குழந்தைகளை அனுப்பி தொடர்ந்து பயிற்சி பெற வைக்கும் பெற்றோர்களுக்கு எனது நன்றியையும், பாராட்டுகளையும்  தெரிவித்துக் கொள்கிறேன். உடல் வலுவாவதுடன், மனம் வலுவாகிறது. அத்துடன் எதிரிகளை எதிர்கொள்ளும் துணிச்சலும் இந்த கராத்தே போட்டியின் மூலம் இளம் வயது பிராயத்திலேயே மாணவ, மாணவிகளுடைய மனதில் இடம்பெறுவதற்கு இந்த போட்டி பயிற்சி உறுதுணையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியை கடந்த 47 ஆண்டுகளாக கராத்தே ரமேஷ் நடத்தி வருகிறார். இந்த போட்டியில் நான் மூன்று முறையாக கலந்து கொண்டு பரிசுகளை வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கி வருகிறேன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கராத்தே பயிற்சி பள்ளி மென்மேலும் வளர எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் இந்த கராத்தே பயிற்சியை கற்றுக் கொள்ளாமல் உள்ள மாணவ, மாணவிகளும் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு தங்களது உடலையும், மனதையும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஏ.சி சண்முகம் பேசினார். இந்திய தலைமை மாஸ்டர் திரைப்பட ஸ்டண்ட் நடிகர் பிளாக் பெல்ட் 8 கராத்தே ரமேஷ் மற்றும் தென்னிந்திய தலைமை மாஸ்டர் பிளாக் பெல்ட் 8 கராத்தே கே .லச்சி ஆகியோர் மற்றும் மாஸ்டர்கள், மாணவ, மாணவியர் ஜப்பான் ஷிட்டோ ராய்- கராத்தே- டு இந்திய பள்ளி ஏற்பாடுகளை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top