ஈரோட்டில் பிரபல கட்டுமான ஒப்பந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு cmk ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
நிறுவன உரிமையாளர் குழந்தைசாமிக்கு சொந்தமான இந்த நிறுவனத்தினர் தமிழக முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் கட்டிடம் அமைக்கும் தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிறுவனத்தினர் வருமானவரி ஏய்ப்பு செய்வதாக வருமான துறையினருக்கு ரகசியதகவல் சென்றது.
அதன் பெயரில் தனியார் கட்டுமான ஒப்பந்த நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் வருமானத்துறையினர் அதிரடியாக நுழைந்து பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ஈரோடு கருப்பண்ணா வீதி பெரியார் நகர். காஞ்சிகோயில். சத்தி ரோடு .உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானத் துறையினர் சோதனையிட்டனர்.
நேற்று காலை 10 மணி முதல் நடைபெற்று வரும் இந்த சோதனையானது இரவு 10 மணி மேலாகியும் தொடர்ந்து நடைபெற்றது.

