உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்ம பூமியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமர் கோயிலில் மூலவர் ஸ்ரீபால ராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடந்துவருகிறது.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபால ராமருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆரத்திகளை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டார்.
வேத விற்பன்னர்கள் தொடர்ந்து மந்திரங்கள் முழங்க, ஸ்ரீபால ராமரின் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி தாமரை உள்ளிட்ட மலர்களாலும், மூலிகைகளாலும் சிறப்பு பூஜை மேற்கொண்டார். பிறகு, ஆரத்தி எடுத்து வழிபட்டார்.
இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திர அஸ்வின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னாள் பிரதமர் தேவகெளடா, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சிரஞ்சீவி, ராம் சரண், கிரிக்கெட் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் அயோத்திக்கு வருகை தந்துள்ளனர்.
