பழைய காட்பாடியில் சிங்கத்தமிழன் சிலம்பம் அகாடமியின் சார்பாக பொங்கல் விழா கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து பழைய காட்பாடியில் சிங்கத்தமிழன் சிலம்பம் அகாடமியின் சார்பாக பொங்கல் விழா கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், உறியடித்தல், கயிறு இழுத்தல், திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டு போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டிகள் நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர் டி.அரவிந்தன் மேற்பார்வையில் நடைபெற்றது. விழாவில் பயிற்சியாளர்கள் கே. திவாகர், ஜி. புவனேஷ், டி. விக்னேஷ்வரன், ஆர்.லோகநாதன், எஸ். சஞ்சய் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
