ஈரோடு மாவட்டம் ஜவுளி சந்தையில் பொங்கல் விற்பனை அமோகம்!!!
1/03/2024
0
ஈரோட்டில் பன்னீர்செல்வம் ஜவுளி சந்தை செயல்பட்டு வருவதை தொடர்ந்து மாலை முதல் இரவுவரை விடிய விடிய ஜவுளி சந்தை நடைபெறுகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மற்றும் மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருகை வந்து மொத்த விலைக்கு துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள். மேலும்,மற்ற இடங்களை விட இங்கு துணிகள் விலை குறைவாக விற்கப்படுவதால் எப்போதும் கூட்டம் அதிகரித்து காணப்படும். சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் வியாபாரிகள் அதிக அளவில் வருவது வாடிக்கையாக காணப்படுகிறது.இந்த நிலையில் கடந்த வாரம் கடும் பனிப்பொழிவு காரணமாக வியாபாரம் மந்தமான நிலையில் நடைபெற்றது.இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் நேற்று ஜவுளி சந்தையில் வட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் காணப்பட்டனர். குறிப்பாக வேலூர், ஆரணி, கேரளா போன்ற இடங்களில் இருந்து அதிகப்படியான வியாபாரிகள் வந்திருந்ததால் சில்லரை வியாபாரம், மொத்த வியாபாரம் நல்ல விலைக்கு துணிகள் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
