தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் ASP மதுகுமாரி அவர்கள் முன்னிலையில் பொங்கல் விழா!
தமிழர் திருநாளை நாடு முழுவதும் இன்று பொங்கல் பண்டிகையையாக மக்கள் கொண்டாடிவரும் நிலையில்,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் காவலர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
உத்தமபாளையம் ASP மதுகுமாரி அவர்கள் முன்னிலையில் காவலர்கள் பொங்கல் வைத்து வெகு சிறப்பாக கொண்டாடினர்.
கண் கவரும் கோலங்கள் இட்டும், காவல் நிலையத்தை அலங்காரம் செய்தும், தித்திக்கும் சுவை மிகுந்த கரும்புகள் வைத்தும் தொடர்ந்து மேலும், காவலர்கள் அனைவரும் நமது பாரம்பரிய உடை அணிந்து இந்த பொங்கலை கொண்டாடினர்.
இந்த நிகழ்வானது அனைவரையும் கவர்ந்ததுடன் உத்தமபாளையம் காவல் துறையினருக்கும், கூடுதல் சிறப்பாக ASP மதுகுமாரி அவர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளதை தொடர்ந்து நமது சென் மீடியா நெட்ஒர்க் செய்தி நிறுவனத்தின் சார்பாகவும் உத்தமபாளையம் காவல் துறையினருக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
