உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரத்தில் சமூக பாதுகாப்புத்துறை மற்றும் கோகிலாபுரம் ஊராட்சி சார்பாக கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,கிராம நிர்வாக அலுவலர் பிரபு அவர்கள் முன்னிலை வகித்தார். தொடர்ந்து இந்த நிகழ்வில் இன்றைய சூழலில் குழந்தைகள் போதைப் பொருட்களுக்கு இணைய வழி பயன்பாட்டின் மூலம் தீய
செயல்பாடுகளில் ஈடுபடுவதன் விளைவுகளை விவாதித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், குழந்தைகள் நலனுக்காக கோகிலாபுரம் ஊராட்சியில் விளையாட்டு அரங்கம் அமைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

