கோவை மாவட்டம்
பொள்ளாச்சியில்
பழமை மாறாமல் கம்பீரமாக நிற்கும் வடகிழக்கு இரயில்வே நீராவி கிரேன் ராஜராஜன்.அந்த காலத்திலே நீராவி கிரேன் பயன்படுத்தப்பட்டும் அதற்கு வரவேற்பும் இருந்து வந்தது.நமது வடகிழக்கு இரயில்வே துறையில் இன்றும் கம்பீரமாக காட்சி இந்த நீராவி கிரேன் தருகிறது.
இந்த நீராவி கிரேன் பயன்பாடானது மீட்டர் கேஜ் பாதையில் இரயிலில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் பழுதான இரயிலில் உள்ள கனமான பொருட்களை தூக்கி இறக்க மற்றும் பழுதானஇரயில் பெட்டியை தூக்கி இறக்க பயன்படுத்தப்பட்டது ,
மேலும்,முப்பத்து ஐந்து டன் எடை வரைதூக்கும் திறன் கொண்டது ( ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ) ஆகும்.1975ஆம் ஆண்டில் இசாத் நகர் பட்டறைகளில் தயாரிக்கப்பட்டு மதுரை டிப்போவில் பயன்பாட்டுக்கு வந்தது.
இதன் பின்னர் 1980ன் முற்பகுதியில் இந்த நீராவி கிரேன் பொள்ளாச்சி டிப்போவிற்கு மாற்றம் செய்யப்பட்டது.மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகலபாதையாக மாற்றம் ஏற்பாட்டின் காரணமாக இதன் சேவை 2008ம் ஆண்டோடு நிறுத்தப்பட்டது .
அகலபாதை மாற்றத்தின் கடைசி கட்டத்தின் போது திண்டுக்கல் -பொள்ளாச்சி- போத்தனூர்-பாலக்காடுபிரிவு தனிமைப்படுத்தப்பட்ட மீட்டர் கேஜ் பிரிவாக மாறியது.
இந்த நீராவி கிரேன் மதுரை பிரிவின் கீழ் இருந்த போது பல சீரமைப்பு பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டது கோல்டன் ராக்(பொன் மலை)பட்டறைக்கும் பொள்ளாச்சிக்கும் இடையிலான இயக்கங்களுக்கு மீட்டர் கேஜ் பயணிகள் வண்டியை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் ராஜ ராஜன் சேவை முக்கிய பங்காற்றியது.

.jpg)