ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவின கணக்கு இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.
அதன்படி தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு தேர்தல் செலவு என கணக்கை சமர்ப்பிக்காத 27 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
தமிழகத்தில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 27 பேரில் பட்டியல் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தகுதி நீக்க பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ளது.
தேர்தல் முடிவு அறிவித்த 30 நாட்களுக்குள் அரசியல் கட்சிகள் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்பது கட்டாயம்.
செலவு கணக்கு தாக்கல் செய்யத் தவறும் வேட்பாளர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.
