தேனி மாவட்ட சுற்றுலா தலமான சுருளி அருவிக்கு வருகை தரும் மக்களை வரவேற்கும் குப்பைக் கழிவுகளும், சாக்கடை நீரும், அலட்சியப் போக்குடன் சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகம்!!
சுருளிப்பட்டி ஊராட்சி நுழைவாயிலில் குப்பைக் கழிவுகளும், சாக்கடை நீரும் சாலையில் ஓடுவதை கண்டும், காணாமலும் சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் பார்த்து ரசித்து வருவதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இப்பகுதியில் சுற்றுலா தலமான சுருளி அருவி உள்ளதால் தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்ட, மாநிலத்திலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.சுருளிப்பட்டி ஊராட்சி நுழைவு பகுதியில் குப்பைக்கழிவுகளும், சாக்கடை நீரும் சாலையில் ஓடுவதால் சுற்றுலா பயணிகள் முகம் சுழித்தவாரு சென்றுகொண்டு உள்ளனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் அலட்சியப்போக்குடன் செயல்படுவதாக ஊராட்சி நிர்வாகத்தினர் மீது பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.வாகன ஓட்டிகளும் நோய்த்தொற்று பயத்துடன் இப்பகுதியில் சென்றவாறு உள்ளனர்.இதனை கருதி தேனி மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்ககோரி சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.