மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோக போட்டியில் கோவை பிராணா யோகா மையத்தில் பயிற்சி பெறும் பதினான்கு பேர், தங்கம்,வெள்ளி,உள்ளிட்ட பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்…

sen reporter
0


 மலேசியாவில்  நடைபெற்ற சர்வதேச யோக போட்டியில் கோவை பிராணா யோகா மையத்தில் பயிற்சி பெறும்  பதினான்கு பேர்,  தங்கம்,வெள்ளி,உள்ளிட்ட   பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்… கோவைசரவணம்பட்டி,சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும் கோவை பிராணா யோகா மையத்தி்ல், யோகாவை தொடர் பயிற்சிகள் வாயிலாக வழங்குவதுடன் ,தேசிய,சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, அதில் சாதனை படைக்கவும் ஊக்கம் அளித்து வருகின்றனர்.இந்நிலையில்  மலேசியாவில்  அண்மையில்  இன்டர்நேஷனல் யூத் யோகா பெடரேஷன் மற்றும் மலேசியா யூத் நோகா பெடரேஷன்,,கோவை பிராணா யோகா மையம் ஆகியோர் சார்பாக     சர்வதேச அளவிலான யோகா சேம்பியன்ஷிப் போட்டி கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது..இதில்  கோவை பிராணா யோகா மையத்தின் நிறுவனர்கள் ஜெயலட்சுமி,மோகன்ராஜ் ஆகியோர் நடுவர்களாக  கலந்து கொண்டனர்... இந்தியா, துபாய்,அமெரிக்கா, கனடா,மஸ்கட்,சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளை சேர்ந்த யோகா வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்ட இதில்,கோவை பிராணா யோகா மையத்தை சேர்ந்த 14  பேரும் பதக்கங்கள் மற்றும் கோப்பைகள்  வென்று அசத்தியுள்ளனர்.பதக்கங்கள் பெற்று கோவை திரும்பிய வெற்றியாளர்களுக்கு காந்திபுரம்  பகுதியில் உள்ள கோவை பிராணா யோகா மையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது..இது குறித்து, கோவை பிராணா யோகா மைய நிறுவனர்கள் ஜெயலட்சுமி,மோகன்ராஜ் ஆகியோர் கூறுகையில்,தற்போது உடல் ஆரோக்கியம்,மன அழுத்தத்தில் இருந்து விடுபட என பலர் எங்களது பிராணா யோகா மையத்திற்கு வருவதாகவும்,ஆனால் இது போன்று வருபவர்கள் தேசிய,சர்வதேச போட்டிகளிலும் ஆர்வமுடன் கலந்து  கொள்வதாகவும், ஆசிரியர்களாக சேவையாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தனர்.. ,மேலும் இது போன்று போட்டிகளில் கலந்து கொண்டு வெல்வதால் யோகா குறித்த ஆர்வம் அதிகரிப்பதாக தெரிவித்தனர்…பிராணா யோகா மையத்தில் பயற்சி பெற்று பதக்கம் வென்ற  பலரும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி  திருமணமான பெண்களும் இருப்பது குறிப்பிடதக்கது…

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top