வேலூர் தொகுதி வாக்கு எண்ணும் பணியாளர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு!
May 29, 2024
0
வாக்கு எண்ணும் பணியாளர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு!பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 வேலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் மற்றும் உதவியாளர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை வேலூர் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருமான வே.இரா.சுப்புலெட்சுமி, காயிதே மில்லத் கூட்டரங்கில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) அ.செல்வராஜ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்)கலியமூர்த்தி, தேர்தல் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.