வளரும் இந்தியா - கென்யா உறவுகள்

sen reporter
0


 கென்யாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் பேரழிவை அடுத்து 267 பேர் இறந்துள்ளனர். 188 பேர் காயமடைந்துள்ளனர், மற்றும் 2,80,000 க்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்திய அரசு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பொருட்களை கென்யா அரசுக்கு உதவியுள்ளது. கென்யாவுக்கான இந்திய அரசின் உதவி ஆனது தென் - தெற்கு ஒத்துழைப்பு மற்றும் ஆப்பிரிக்காவை முதன்மையான முன்னுரிமைகளில் வைத்திருக்கும் அற்பணிப்பு ஆகியவற்றின் உணர்வில் அந்த நாட்டுடன் ஆன இந்தியாவின் வலுவான நட்பு மற்றும் உறவுகளை மீண்டும் வலியுறுத்துவதாகும் இது சமீபத்தில் முடிவடைந்த G20 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமரால் பிரகடனப்படுத்தப்பட்டது.

       கென்யா முக்கிய உறுப்பினராக உள்ள ஆப்பிரிக்க யூனியனுடன் இந்தியா நீண்ட காலமாக தொடர்பை கொண்டுள்ளது மேலும் உற்பத்தி ரியல் எஸ்டேட் டெலிகாம் ஐடி வங்கி மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 60க்கும் மேற்பட்ட பெரிய இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில் கென்யாவில் இந்தியா இரண்டாவது பெரிய முதலீட்டாளராக உள்ளது. 

       கூடுதலாக, கென்யாவிற்கு மருந்து பொருட்களை வழங்குவதில் இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கிறது சுகாதார முயற்சிகளுக்கு பங்களிப்பும் மற்றும் மருந்துகளை சுலபமாக கையாள கூடியதாக ஆக்குகிறது.  COVAX கூட்டணியின் கீழ் கென்யாவிற்கு 1.12 மில்லியன் கோவிஷீல்டு டோஸ்களை இந்தியா வழங்கியுள்ளது.
         2003இல் இந்தியா ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கென்யா கிழக்கு ஆப்பிரிக்க சமூகத்தில் ஒரு வலுவான பங்காளியாக உள்ளது பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட இந்திய பெருங்கடல் ரிம் அசோசியேஷனில் கென்யா இந்தியா ஆகிய இரு நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன.
        கென்யாவில் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் 85 சதவீதம் முஸ்லிம்கள் 11% ஆதிக்கம் செலுத்துகின்றனர். மேலும் 80,000 அதிகமான இந்திய புலம் பெயர்ந்தோர் அந்நாட்டில் உள்ளனர் 2017 ஆம் ஆண்டில் கென்யா அரசாங்கம் இந்திய வம்சாவளியை நாட்டின் 44வது பழங்குடியினராக அங்கீகரித்தது. கென்யாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் மிகப்பெரிய வருவாய் ஆதாரங்களில் இந்தியாவும் ஒன்றாகும்.

2023 ஆம் ஆண்டில் கென்யா ஜனாதிபதி சமோய் ரூட்வின் இந்திய விஷயத்தின்போது கென்யாவிற்கு அதன் விவசாயத் துறையை நவீனமயமாக்குவதற்காக இந்தியா 250 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது. மோடி - ரூடோ பேச்சுவார்த்தைக்கு பிறகு விளையாட்டு கல்வி டிஜிட்டல் தேர்வு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வழங்கும் ஐந்து ஒப்பந்தங்களில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். மற்றும் கடல் சார் ஒத்துழைப்பு குறித்த கூட்டு தொலைநோக்கு அறிக்கையை வெளியிட்டனர் இது இந்தியாவில் பகாரி பெருங்கடல் ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது.
       உலகின் வேகமாக வளர்ந்து வரும் 10 பொருளாதாரங்களில் ஆறு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளதால் ஆப்பிரிக்க கண்டம் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க வகையில் முக்கியமாக அமைகிறது. இந்தியா - கென்யா அதன் வரலாற்று உறவுகளை தொடந்தும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பதற்கான புதிய வழிகளையும் ஆராய்ந்து வருகிறது.

          2023 இல் இந்தியாவின் தலைமையில் ஜி 20 இருக்கும்போது ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக சேர்ப்பது என்பது தெற்கின் குரலாக வெளிப்பட்டு, உலகளாவிய புவிசார் அரசியலில் உலக ஒழுங்கில் பரஸ்பர நன்மை பயக்கும் தீவிரத் தன்மையை காட்டுகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top