சென்னை மாவட்டம் 194வது வார்டு உறுப்பினர் விமலா கர்ணா அவர்கள் விமலா கர்ணா மேயர் பிரியா அவர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு எதைக் கொடுக்கிறோமோ அதனையே பெறுகின்றோம், எதை விதைக்கின்றோமோ அதையே அறுவடை செய்கின்றோம் என கூறியதை தொடர்ந்து நம்முடைய மாண்புமிகு தமிழக முதல்வர்
அவர்கள் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48,மகளிர் உரிமை தொகை மற்றும் மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம், நான் முதல்வன், தமிழ் புதல்வன்,இல்லம் தேடி கல்வி,கலைஞர் சிற்றுண்டி, காலை சத்துணவு, இப்படி மக்களுக்கான சிறப்பான திட்டங்களை அறிவித்து மக்களுடைய மனங்களில் மகிழ்ச்சி என்ற விதையை விதைத்து அதையே இன்று அறுவடை செய்திருக்கின்றார் என கூறினார். அதுபோல் என்னுடைய 194 வது வட்டத்திலும் பல வருடமாக போடப்படாத சாலைகள் போடப்பட்டிருக்கிறது. பல மாதமாக மக்கள் எதிர்பார்த்த பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நான் தங்களிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கின்ற மழைநீர் கால்வாய் பணிகளும் விரைவில் நடைபெற இருக்கின்றது. நிதியினை ஒதுக்கி தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும்,எங்களுடைய கோரிக்கையை நிவர்த்தி செய்கின்ற மேயர் பிரியா அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.