தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா IAS அவர்களிடம் நிலுவைத் தொகையினை வழங்கவேண்டி கோரிக்கை மனு!!!
தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற பழக்கத்தினை ஒழித்தல்
மற்றும் ஊராட்சிகளில் உள்ள மக்கும் குப்பை மக்காத குப்பை சேகரித்தல்- தரம் பிரித்தல் பணிகள் - போன்ற சுகாதாரப் பணிகளை ஊராட்சியில் உள்ள ஊக்குணர்கள் செய்து வருகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியமாக 04-01-2024 அன்று அரசாணையின்படி இதுவரை தேனி மாவட்டத்தில் ஊராட்சியில் பணிபுரியும் ஊக்குனர்களுக்கு தொகுப்பூதியம் 2000 /-ரூபாய் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையினை வழங்க கேட்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம்
AITUC மாவட்ட தலைவர் வீ.பாண்டி அவர்கள் தலைமையிலும் ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்க தலைவர் பி.முருகானந்தம், செயலாளர் ஆர்.வெங்கடேசன், பொருளாளர், பி.சண்முகநாதன் அவர்களின் முன்னிலையிலும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தேனி மாவட்ட தலைவர்ர் ஆர்.வி.ஷஜீவனா IAS அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினர்.மனுவை ஏற்றுக் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தகவல் தெரிவித்துள்ளானர்.