பொள்ளாச்சியில் சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கிய திமுகவினர்!!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முன்னாள் சன் நியூஸ் செய்தியாளரும், தற்போதைய தினமணி நாளிதழ் புகைப்பட கலைஞருமாகிய அஜய் ஜோசப் கடந்த 30ம் தேதி தன் பணியை முடித்துக் கொண்டு செல்லப்பம்பாளையம் புதூரில் உள்ள வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.இந்த நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிலை தடுமாறி சாலை விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அஜய் ஜோசப் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் அவரது குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாயை அவரது மனைவி சபீனாவிடம் வழங்கினார்.இதில் நகர துணை செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் அவரது குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கி வருகின்றனர். மேலும்,அடையாளம் தெரியாத வாகனம் மோதியதை தற்போதுவரை காவல் துறையினர் கண்டுபிடிப்பதில் மெத்தனப்போக்கில் செயல்பட்டு வருவதாக தகவல் தெரிகிறது. காவல்துறையினரின் அலட்சியப்போக்கானா இந்த செயலால் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அஜய் ஜோசப் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அவரது குடும்ப சூழ்நிலை கருதி உதவி செய்ய முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.