கோவை : சீசனுக்கு ஏற்ற புத்தம் புதிய பிராண்டுகளை அறிமுகம் செய்து வருகிறது டிரிக்கர் ஜீன்ஸ். எதிர்கால இளைஞர்கள் விரும்பும், வியத்தகு வடிவமைப்புகளையும் மேற்கொண்டு வருகிறது.
கோவையில் செயல்பட்டு வரும் கேஜி டெனிம் நிறுவனம், சர்வதேச அளவில் ஜீன்ஸ் தயாரிக்கும் நிறுவனங்களின் முன்னணி பெற்று வருகிறது. புதியவற்றை அறிமுகம் செய்யும் வகையில் 2024 பேஷன் ஆண்டு கொண்டாடுகிறது. இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் 70 ஷோரும்களை கொண்டுள்ளது. அடுத்த ஆண்டுவாக்கில் இதன் எண்ணிக்கையை 150 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
தற்போது புதிய சீசனில் டெனிம் வகையை மீண்டும் கொண்டு வந்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இதுவே வரவேற்பை பெற்றிருக்கும். டிரிக்கர் அப்பேரல், தேசிய அளவில் அறிமுகமான பிராண்ட். மழைக்காலம், குளிர்காலத்துக்கு ஏற்ற வகையில், அனைத்து வகையினருக்கும் ஏற்ற ஆடைகளை வடிவமைத்து வருகிறது கே.ஜி.,டெனிம். கேரளா, மத்திய பிரதேசம், பெங்களுரு, டில்லி, ராஜஸ்தான் பேஷன் ஷோ நடத்தி வருகிறோம். நீண்ட இடைவெளிக்கு பின் புதிய ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தரமான ஆடைகளில் கேஜி டெனிம் முன்னணியில் உள்ளது. நீண்ட உழைப்பை கொண்டது. இந்த துணிகளை தண்ணீரில் போட்டு எடுத்து பயன்படுத்தலாம். நிறத்தில் 50 வகையான நீல நிறங்களை அறிமுகம் செய்துள்ளது தற்போது பிரபலமாகி வருகிறது.
டி.ஷர்ட், ஷர்ட், பேன்ட் வகைகளையும் அறிமுகம் செய்துள்ளது. பருவ காலத்துக்கு ஏற்ப தள்ளுபடியும் அளித்துள்ளது. கேஜி டெனிம், 6500 பேருக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளது. இவ்வாறு, கேஜி டெனிம் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.