சன்னியாசி திருடியதாக கூறி ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை அடித்து கொலை செய்து புதைத்த கொடூரம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோவில் மலை அடிவாரத்தில் உள்ளது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த பகுதியில் பேசிக்கொண்டு இருந்தனர். இந்த தகவல் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காட்பாடி டிஎஸ்பி சரவணன், பொன்னை காவல் ஆய்வாளர் அன்பரசி மற்றும் மேல்பாடி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சன்னியாசி ரவி என்பவர் வள்ளிமலை கோவில் மலை அடிவாரத்தில் பிச்சை எடுத்து வந்ததாகவும், இந்த நிலையில் கோட்டநத்தம் பகுதியில் உள்ள பூபாலன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருக்கு சொந்தமான நிலத்தில் குடிசை அமைத்து அவரது நிலங்களை பராமரிக்கும் பணியினை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பூபாலன் நிலத்திற்கு அருகில் நிலம் வைத்துள்ள ஹரி என்பவருக்கும் சன்னியாசி ரவிக்கும் ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் ஹரி உள்ளிட்ட சிலர் சன்னியாசி ரவியை அடித்து கொலை செய்து புதைத்து விட்டதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் ஹரியின் மீது சந்தேகம் அடைந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வள்ளிமலை மற்றும் மேல்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேல்பாடியில் சன்னியாசியை அடித்து கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்தில் இருந்த சன்னியாசி ரவியின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து அதை மறு பிரேத பரிசோதனை செய்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.