நகராட்சி நிர்வாகம் செயல்படாமல் மெத்தனப்போக்கை கடைபிடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நோய்தொற்று பெரிய அளவில் ஏற்படும் முன் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் ஒற்றை கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா IAS அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!!
June 26, 2024
0
அல்லிநகரத்தில் கால்நடை மருத்துவமனை அருகே உள்ள சாக்கடை கால்வாயில் குப்பைக் கழிவுகள் மலைபோல் தேங்கி நிற்பதால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் முகம் சுழித்தவாறே செல்கின்றனர்.மேலும், குப்பைக் கழிவுகளால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், இப்பகுதி மக்களும் துர்நாற்றம் வீசுவதாக கூறி வருவதுடன் நோய்த்தொற்று பயத்துடன் காணப்படுகின்றனர். அல்லிநகரம் நகராட்சி நிர்வாகமானது இப்பகுதியில் உள்ள சாக்கடை பாலங்கள் மற்றும் சாக்கடை கால்வாய்களை தூய்மைப்படுத்த முனைப்பு காட்டாமல் உள்ளதாகவும், ஆடிக்கு ஒருமுறையும், அமாவாசைக்கு ஒருமுறையும் தூய்மைப்படுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை கூறியும்