வேலூர் சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா!!தமிழக ஆளுநர் ஆர்.என்.இரவி பங்கேற்பு வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 18ம் பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர்.என். இரவி தலைமையேற்று தமிழ் தாய் வாழ்த்து பாடலை பாடி, திருக்குறளை வாசித்து, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 2022- 23ம் கல்வி ஆண்டில் தேர்ச்சிப்பெற்ற, மாணவ மாணவிகளுக்கு பட்டமளித்து வாழ்த்தினார்.
சிறப்பு முதன்மை விருந்தினராக சென்னை தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன இயக்குனர், ஜி.ஏ.இராமதாஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பட்டம்பெரும் மாணவ மாணவிகளை வாழ்த்தினார்.
இவ்விழாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். முனைவர். த.ஆறுமுகம், சிறப்பு விருந்தினர்களை வரவேற்புரையாற்றி ஆண்டறிக்கையை வழங்கினார். இவ்விழாவில் 249 முனைவர் பட்டமும், 42 இளங்கலை மற்றும் 34 முதுகலை பாடப் பிரிவுகளின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளுடன் பட்டங்களை வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இவ்வாண்டு மொத்தம் 43,735 மாணவ மாணவியர்கள் பட்டம் பெற்றனர். இவற்றில் 325 மாணவ மாணவிகள் நேரடியாகவும், 43,410 மாணவ மாணவியர்கள் ஆளில்லா முறையிலும் பட்டம் பெற்றதாக தெரிவித்தனர். 132 முதுநிலை பட்டயப்படிப்பு மாணவ மாணவியர்கள் 13 பட்டய படிப்பு மாணவ மாணவியர்கள் என 37886 இளங்கலை மற்றும் 5268 முதுகலை மாணவர்கள் 111 இளமுனைவா எம்.பில் பட்டமும் ஒட்டுமொத்தமாக 43735 மாணவ மாணவியர்கள் பட்டம் பெற்றுள்ளனர் என நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பட்டம் பெரும் மாணவ மாணவியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் சிறப்பு விருந்தினர்கள் காவல் படையினர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் மாவட்ட அளவிலான உயர் பதவி அலுவலர்கள் வருவாய்த்துறையினர், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இவ்விழா நிகழ்ச்சியை திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ஜெ.செந்தில்வேல்முருகன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ர. பாபுஜனார்த்தனம் ஆட்சிமன்ற குழு மற்றும் கல்விக்குழு, பல்கலைக்கழக அலுவலர்கள் பணியாளர்கள் ஆகியோர் இந்த பட்டமளிப்பு விழாவை ஏற்பாடு செய்து சிறப்பித்தனர். இவ்விழா இறுதியில் நாட்டுப்பண் பாடப்பட்டு நிர்வாகத்தின் சார்பில் நன்றியுரையாற்றி பட்டமளிப்பு விழா நிறைவுபெற்றது.