கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் விநியோகம்!
கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டை பகுதியில் அன்னதானம் விநியோகம் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் கடலூர்- சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாமியானா பந்தல் அமைத்து கிருத்திகையை முன்னிட்டு முருக பக்தர்களான தொழிலதிபர் அச்சுதன் -அமுதா தம்பதியர் பொதுமக்கள் சுமார் 500 பேருக்கு அன்னதானம் விநியோகம் செய்தனர். பொதுமக்கள் அனைவரும் வரிசையில் நின்று காத்திருந்து அன்னதானத்தை வாங்கி உண்டு மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகி கமலவிநாயகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.