கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளரிவு வேளையில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது அடுத்தத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதின் காரணமாக பலநூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.தொடர் கனமழை காரணங்களால் மீட்பு பணிகள் இன்னும் முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது.இன்று ஐந்தாவது நாளாக எட்டிய நிலையில் மீட்பு பணிகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 300க்கும் மேற்பட்டவர்களாக உள்ளது.
அதே போல் மன்சரிவால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட பலரையும் மீட்டு பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் இவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை அனுப்ப வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்திருந்தார்.அதன் அடிப்படையில் தமிழக வெற்றி கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட சார்பாக கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்கி மற்றும் இளைஞர் அணி தலைவர் பாபு தலைமையில் அத்தியாவசிய பொருட்களான உடைகள் ,காலணிகள், போர்வை,தலைகாணி,பக்கெட், உள்ளிட்ட இரண்டு லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை வயநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நேற்று இரவு தவெக தலைவர் அறிவுறுத்திய நிலையில் முதல் கட்டமாக இன்று காலை கோவையில் இருந்து வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்துள்ளதாகவும் , தொடர்ந்து வயநாடு மக்களுக்கு தேவையான பொருட்களை தமிழக வெற்றி கழகம் சார்பில் அனுப்பி வைக்கப்படும் என தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர்.