கோவையில் உள்ள கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் 78 வது சுதந்திர தின விழாநடைபெற்றது.நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் லயன் தேவேந்திரன் மற்றும் கவுரி ஆகியோர் தேசிய கொடியேற்றினர்.உடன் உதயேந்திரன்,செயலர் ரவிக்குமார்,பள்ளி முதல்வர் சரண்யா,வித்யாஸ்ரம் பள்ளி நிர்வாக இயக்குனர் சவுந்தர்யா, உடனிருந்தனர்.விழாவில்,பள்ளியின் மாணவர் தலைவர் மற்றும் நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றது.சுதந்திர தின விழாவில்,சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஒருங்கிணைந்த இந்தியா உருவான வரலாற்றை கூறும் நாடக அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
தொடர்ந்து தேசிய கொடி வண்ணங்களை கைகளில் பிடித்தபடி நின்ற மாணவர்களின் அணிவகுப்பு தத்ரூப இந்திய வரைபடமாக காட்சியளித்தது.
விழாவில்மாணவ,மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.