கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி பயிற்சி முகாமில், பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுப்பது குறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் திருமதி.ஜெயஸ்ரீ முரளிதரன் இ.ஆ.ப, காவல்துறை தலைவர் திருமதி.பவானீஸ்வரி இ.கா.ப, மற்றும் சமூக பாதுகாப்பு ஆணையர் திரு.ஜானி டாம் வர்கீஸ் இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு I.A.S. ஐ.ஆ.ப.மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெ.தங்கதுரை .I.P.S. ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. உடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் திரு.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்: தனியார் பள்ளி பயிற்சி முகாமில், பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் சம்பவம் தொடர்பாக விசாரணை :
8/23/2024
0
