பெரியகுளம் டி.கல்லுப்பட்டி மற்றும் வடுகபட்டி உள்ளிட்ட கிராமங்களில் தேனி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பாக எச்ஐவி/ எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு டி.கல்லுப்பட்டி பேரூராட்சி தலைவர் நாகராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்.இதனை தொடர்ந்து மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகினுடைய மாவட்ட திட்ட மேலாளர் முகமது ஃபாருக் அவர்கள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் எச்ஐவி எய்ட்ஸ், பால்வினை தொற்று ,ஏ ஆர் டி கூட்டு மருந்து சிகிச்சை ,ரத்ததானம் மற்றும் காசநோய் குறித்த தீவிர விழிப்புணர்வானது பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மக்களை தேடி மருத்துவ குழுவினர் ரத்த அழுத்தம் ,சர்க்கரை அளவு மற்றும் எச்ஐவி பரிசோதனை செய்தனர். இந்நிகழ்ச்சியினை பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய நம்பிக்கை மையம் மற்றும் சுக வாழ்வு மைய ஆற்றுப்படுத்துநர்கள் மற்றும் ஆய்வக நுட்புனர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகிழ்ச்சியினை ஆண்டிபட்டி ஆரோக்கிய அகத்தினுடைய இலக்கு மக்கள் திட்டம் மற்றும் தொடர்பணியாளர் திட்ட பணியாளர்கள் ஒருங்கிணைத்திருந்தனர். ஏராளமான பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
8/27/2024
0
