வேலூர்:கிராமப்புறங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு வித்யா நேத்ரா கல்வி உதவித்தொகை வழங்கிய ஸ்ரீ சக்தி அம்மா!
9/05/2024
0
வேலூர்மாவட்டம்திருமலைகோட அரியூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் ஸ்ரீ நாராயணி பீடம் சார்பில் கிராமப்புறங்களில் இருந்து பல்வேறு கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் 600 பேருக்கு கல்வி உதவித்தொகை வித்யா நேத்ரா கல்வி உதவித் தொகையை வழங்கி ஸ்ரீ சக்தி அம்மா தனது பொற்கரங்களால் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அந்த மாணவ, மாணவிகளை ஆசீர்வதித்து அவர் பேசியதாவது: உலக நாடுகளில் நாம் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் பல நாடுகளில் இந்த நிமிடம் உயிர் போகுமோ இன்றைக்கு நமது உயிர் இருக்குமோ என்ற நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. உக்ரைன், இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இந்த போர் பயத்தால் உயிர் பயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்வது ஒரு வாழ்க்கையா? நமது நாடுகளில் நிம்மதியாக வாழ்கிறோம். இது வாழ்க்கையா என்று பார்த்தால் நிம்மதியாக வாழ்வதுதான் வாழ்க்கை. நிம்மதி இருந்தால் தான் அனைத்தும் கிடைக்கும். இறையருள் மிகவும் முக்கியமானது. இறைவன் அருளால் நமக்கு அனைத்தும் கிடைக்கிறது. அப்படி ஒரு தாய், தந்தையர் அவர்களுக்கு நாம் மகனாக பிறந்தது மகளாக பிறந்தது என்று பல்வேறு புண்ணியங்களை நாம் செய்திருக்க வேண்டும். இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தது நாம் செய்த புண்ணியம். அத்துடன் இதுதான் கர்மா என்று அழைப்பார்கள். அந்த கர்மா தான் நம்மை இந்த இடத்துக்கு அழைத்து வருகிறது என்று ஸ்ரீசக்தி அம்மா ஆசி வழங்கி கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பேசினார். இதில் இறுதியாக மாணவ, மாணவிகள் காசோலைகளை பெற்றுக் கொண்டு ஸ்ரீ சக்தி அம்மாவிற்கு தங்களது நன்றியை காணிக்கையாக செலுத்தினர். இதைத் தொடர்ந்து ஸ்ரீ நாராயணி பீடத்தின் டிரஸ்டி சௌந்தரராஜன் நன்றி கூற இந்த கல்வி உதவித்தொகை வழங்கும் விழா இனிதே நிறைவு பெற்றது. இந்த விழாவில் ஸ்ரீ நாராயணி பீடத்தின் மேலாளர் சம்பத் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையின் மருத்துவர் இயக்குனர் டாக்டர் பாலாஜி மற்றும் ஸ்ரீ நாராயணி பீடத்தைச் சேர்ந்த அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த உதவித்தொகை வாங்கிய கல்லூரி மாணவ , மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் நிகழ்ச்சியின் நிறைவில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
