பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளியில் 17 வயது மாணவனை புறநானூறு செய்யுலை மாற்றி எழுதியதால் மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது செய்து மகாலிங்கபுரம் போலீசார் விசாரணை. பொள்ளாச்சி- செப்-5 பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள லதாங்கி வித்யா மந்திர் தனியார் பள்ளிலதாங்கி வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் பெயர் வயது 17 என்பவர் கடந்த 03.09.2024 ஆம் தேதி மாலை தமிழ் வகுப்பில் ஆசிரியர் சுரேஷ் குமார் என்பவர் புறநானூறு செய்யுளை பார்த்து அனைவரையும் நோட்டில் எழுத சொன்னதாகவும் அதற்கு மாணவன் தவறுதலாக புரிந்து கொண்டு மற்றொரு செய்யுளை தனது நோட்டில் எழுதியுள்ளார். இதனை பார்த்த ஆசிரியர் சுரேஷ்குமார் மாணவனை கண்டித்து வேண்டுமென்று இதை செய்வதாக எண்ணி மாணவனின் கன்னத்தில் அறைந்தும் கையால் நெஞ்சு மற்றும் வயிற்றில் குத்தியும் பரிச்சை அட்டையால் முதுகில் இரண்டு அடி அடித்தும் உள்ளார். இதனால் மாணவன் வலி தாங்க முடியாமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று வெளி நோயாளியாக சென்று சிகிச்சை பெற்று வருகிறார், இது சம்பந்தமாக மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆசிரியரை கைது செய்து விசாரணை பேர் மேற்க் கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளியில் 17 வயது மாணவனை புறநானூறு செய்யுலை மாற்றி எழுதியதால் மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது.
9/05/2024
0
