கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

sen reporter
0


 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.11 கோடியே 38 இலட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டபணிகள் கல்லாவி,வெங்கடதாம்பட்டி, மிட்டப்பள்ளி, சிங்காரப்பேட்டை மற்றும் மகனூர்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும்ஊராட்சித்துறை,பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகிய துறைகள் சார்பாக ரூ.11 கோடியே 38 இலட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி.

கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், கல்லாவி ஊராட்சியில் 15-வது மத்திய நிதி ஆணையம் திட்டம் (2023-24) -ன் கீழ், ரூ.1 கோடியே 26 இலட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார கட்டிடம் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாள்தோறும் மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகளின் வருகை, அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவச் சிகிச்சைகள், மருந்துகளின் இருப்பு, குறித்து பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கைபேசி வாயிலாக குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களிடம் தங்களுக்கு பிரசவத்தின் போது வழங்கப்பட்ட சிகிச்சைகள், குழந்தைகளுக்கு வழங்கிய தடுப்பூசிகளின் விபரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து கர்ப்பிணி பெண்ணிடம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நல்ல முறையில் சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி வருகிறார்களா என்பது குறித்து கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, வெங்கடதாம்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் (2023-24) -ன் கீழ், ரூ. 49 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் விளையாட்டு அரங்கத்தில் கட்டப்பட்டு வரும் உள்ளரங்கு ஷட்டில் கோர்ட் கட்டுமான பணிகளையும், மகனூர்பட்டி ஊராட்சியில் விசுவாசம்பட்டி முதல் மகனூர் பட்டி சாலையில் கல்லாறு ஆற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.4 கோடியே 15 இலட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட பாலத்தின் பணிகள் மற்றும் விசுவாசம்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் (2023-2024) -ன் கீழ், ரூ.14 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும்அங்கன்வாடி கட்டிடம் கட்டுமான பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கிய மதிய உணவு மாதிரி, எடை, உயரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, பொதுப்பணித்தறை சார்பாக ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், கல்லாவி ஊராட்சியில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், ரூ.33 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் செவிலியர் விடுதி கட்டுமான பணிகளையும், மிட்டப்பள்ளி ஊராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.1 கோடியே 27 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 6 வகுப்பறைகள் கட்டுமான பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அப்பள்ளியில் பயிலும் மாணவியர்களின் கணித வாய்பாடு, கற்றல், ஆங்கிலம் வாசிப்பு திறன் குறித்து மாணவ மாணவியர்களிடம் கேட்டறிந்தார். மேலும், சிங்காரபேட்டை ஊராட்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.2 கோடியே 11 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 10 வகுப்பறைகள் கட்டுமான பணிகளையும்,

தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக ஊத்தங்கரை பேரூராட்சி எழில் நகரில், அம்ருத்திட்டத்தின் கீழ், ரூ.14 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பூங்கா அமைக்கும் பணிகள் மற்றும் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் (2023 - 2024) -ன் கீழ், ரூ.1 கோடியே 46 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அறிவு சார் மைய கட்டுமான பணிகள் என மொத்தம் ரூ.11 கோடியே 38 இலட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திருமதி.மலர்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பாலாஜி, திருமதி.தவமணி, ஒன்றிய பொறியாளர்கள் திரு.சாஸ்தா, திரு.செல்வம், திரு.சுரேஷ், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் திரு.அமானுல்லாகான், ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் திரு. ரவிசங்கர்,

பேரூராட்சி உதவி பொறியாளர் திரு.பழனிசாமி,பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் திரு. கனகராஜ், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top