கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியாக இயங்கி வரும் தியாகி என்.ஜி.இராமசாமி மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக,பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் தங்களது திறன்களை வளர்த்தி கொள்ளும் விதமாக,, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளிட்ட பாடத்திட்டங்களின் செயல் முறைகள் அடங்கிய ஸ்டெம் எனும் ஆய்வகம் துவங்கப்பட்டது.மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு பரமசிவம்,முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி ஆகியோர் ஆலோசணையின் பேரில் துவங்கப்பட்ட ஆய்வகத்தின் திறப்பு விழாவில்,பள்ளியின் தலைமையாசிரியர் சதாசிவன் தலைமைவகித்தார்.நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னால் மாணவர்கள் வோஸ்கா நிறுவனத்தின் திட்ட மேலாளர் கார்த்திகேயன், சுமுகா க்ரீன் டெக் ஏவியேசன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரவீண் ராஜசேகர்,மற்றும் முன்னால் மாணவி பொன் சொர்ணம் கந்தசாமி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு புதிய ஆய்வகத்தை திறந்துவைத்தனர்.புதிதாகதுவங்கப்பட்டஆய்வகத்தி்ல்,மாணவர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எளிமையான, சிறப்பான கல்வியை எவ்வாறு கற்பது, நவீன தொழில் நுட்பத்தில் சர்வதேச தரம் வாய்ந்த, 'ஸ்டெம்' பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் இந்த ஆய்வகம் செயல்பட உள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக மாணவர்கள் பள்ளியல் பயலும் போதே, கணிதம், அறிவியல் மற்றும் பொறியியல் பற்றிய அடிப்படை அறிவைப் பயன்படுத்துவதன் மூலம் தகவல் அறிவியல் மற்றும் பொறியியல் சிக்கல்களை பகுப்பாய்வு செய்து தீர்க்கும் திறனைப் பெறும் வகையில் இந்த ஆய்வகம் துவங்கப்பட்டுள்ளதாக தலைமையாசிரியர் சதாசிவன் தெரிவித்தார் விழாவில் என்.ஜி.ஆர்.பள்ளி ஆசிரியர்கள் மாணவ,மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

