கரிவலம்வந்தநல்லூர் அரசு பள்ளியில் மலைவேல் பவுண்டேஷன், அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் போதையில்லா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியர் வினோத் தலைமை வகித்தார். மலைவேல் பவுண்டேஷன் நிறுவனர் கணபதி முன்னிலை வகித்தார். பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினரும் சமூக ஆர்வலருமான சண்முகவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முகாமில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை இஸ்ரவேல் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
