கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, "சமூகநீதி நாள்" உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அன்று (16.09.2024) அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
தந்தை பெரியார் எனப் போற்றப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 17 ஆம் நாளினை ஆண்டுதோறும் "சமூக நீதி நாள்" ஆக அனுசரிக்கவும், உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த வருடம் செப்டம்பர் 17 (செவ்வாய் கிழமை) மிலாடி நபி அரசு விடுமுறை தினம் என்பதால் இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி,
சமூக நீதி நாள் உறுதிமொழி:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும்,
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்.சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்.சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்.
மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்.சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து துறைஅலுவலர்கள்எடுத்துக்
கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.புஷ்பா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.பன்னீர்செல்வம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.ரமேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் திரு.மதுசூதணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
