சென்னை : இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்!!!
10/19/2024
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மெரினா கடற்கரையில்நடைபெற்ற விமானப்படையினரின் வான்வழி சாகச நிகழ்ச்சியை காணவந்து உயிரிழந்த வடசென்னை பகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த திரு.கார்த்திகேயன், கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த திரு.ஜான் ஆகிய 2 நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார். இந்நிகழ்வின் போது, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே. பி. சங்கர், சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி சு.கீதா, ஆகியோர் உடனிருந்தனர்.
