திருவண்ணாமலை: முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பொன் விழாவினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் விழா!!!
10/19/2024
0
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பொன் விழாவினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் விழாவில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ்திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 860 ஊராட்சி மன்றங்களுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 412 ஊராட்சி மன்றங்களுக்கும் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 208 ஊராட்சி மன்றங்களுக்கும் 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு, மாண்புமிகு சட்டப்பேரவை துணைத் தலைவர் திரு.கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப, (திருவண்ணாமலை), நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
