கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் கிருஷ்ணகிரி பால் பண்ணை வளாகத்தில் உள்ள 385 தென்னை மரங்கள் மகசூல் தொடர்பான ஒப்பந்தப்புள்ளி / ஏலம் 2024-2026 வருடத்திற்கு டெண்டர் முடிந்து உத்தரவு வழங்கும் தேதி முதல் இரண்டு வருட காலத்திற்கு குத்தகைக்கு விட மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் வியாபாரரிகளிடமிருந்து (Tender Forms) கோரப்படுகிறது. விண்ணப்ப படிவங்கள் அலுவலக வேலை நாட்களில் 09.10.2024 தேதி முதல் 22.10.2024- தேதி 12.00 மணி வரை விண்ணப்ப படிவம் ரூ.200/- (வரிகள் உட்பட) அலுவலக வங்கி கணக்கு எண் 05490100005632-ல் செலுத்தி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவங்கள் பெற கடைசி நாள் 22.10.2024 மாலை 2.00 மணி வரை.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி, பொது மேலாளர், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், கிருஷ்ணகிரி. விண்ணப்பம் பெறப்படும் கடைசி நாள் 22.10.2024 நேரம் பகல் 2.00 மணி. பிணையத்தொகை ரூ.5000க்குவங்கிவரைவோலைவிலைப்புள்ளியுடன் இணைக்கப்பட வேண்டும். விலைப்புள்ளிசமர்பிக்காதவர்கள் ஏலம் அன்று 2.30 மணியளவில் நடைபெறும் பகிரங்க ஏலத்தில் பிணையத் தொகை ரூ.5000/- வங்கி வரைவோலை அலுவலகத்தில் செலுத்தி நேரடியாக கலந்து கொள்ளலாம்.விலைப்புள்ளி திறப்பு / ஏலம் 22.10.2024 அன்று மதியம் 2.30 மணியளவில் இவ்வொன்றிய நிர்வாக அலுவலகம், கிருஷ்ணகிரியில் நடைபெறும் என ஆவின் பொது மேலாளர் திரு.பி.சுந்தரவடிவேலு அவர்கள் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் பால் பண்ணை வளாகத்தில் உள்ள 385 தென்னை மரங்கள் மகசூல் மறு ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏலம் கோருதல்!!!
10/08/2024
0