வாக்குச்சாவடிநிலைஅலுவலர்களால் மேற்கொள்ளப்பட உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க, 01.01.2025 தேதியினை தகுதி நாளாகக் கொண்டு 06.01.2025 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட பல்வேறு முன்திருத்த நடவடிக்கைகளுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்திலுள்ள 16,36,728 வாக்காளர்களை வீடு வீடாக சென்று கணக்கெடுத்து சரிபார்க்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சரிபார்ப்பு பணியின்போது வேறு பகுதிக்கு மாறுதலில் சென்றவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், இறந்த வாக்காளர்கள் ஆகியோரை அடையாளம் கண்டு விதிகளின்படி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கவும் 17 வயதுடைய நபர்கள், அவர்கள் 18 வயது அடையும் நாளில் அந்த காலாண்டிற்குள் சேர்க்கும் வகையில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நவீன தொழில்நுட்ப வசதிகளை பின்பற்றி ஒரே வாக்குச்சாவடியில் ஒரே பாகத்தில் 1,337 வாக்காளர்களும், ஒரே சட்டமன்ற தொகுதியில் 1,055 வாக்காளர்களும், மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதியிலும் 1,13,174 வாக்காளர்கள் என மொத்தமாக 1,15,566 வாக்காளர்கள் ஒரே பெயரிலும், ஒரே வயது, உறவு முறை பெயர் என ஒத்த நபர்களாக வாக்களர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை அடையாளம் கண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டு விசாரணை செய்து அதனடிப்படையில் உண்மையான வாக்காளர்களை கண்டறிய தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1,15,566 வாக்காளர்களுக்கும் அவர்களது முகவரி வாக்காளர் பட்டியலில் பலமுறை இடம்பெற்றுள்ளது குறித்தும், அதில் எந்த விபரம் சரியானது என்பதற்கான ஒப்புதல் கடிதமான படிவம் 'ஏ' ஆனது பதிவஞ்சலில் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்/ வருவாய் கோட்டாட்சியர்களிடமிருந்து அனுப்பப்படும்.இது தொடர்பான விளக்க கடிதம் குறித்து வாக்காளர்கள் எவ்வித அச்சமும் இன்றி அதில் தெரிவிக்கப்பட்ட விவரங்களில் எது சரியானது என்பதை தேர்வு செய்து தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். அவ்வாறு அனுப்பப்படும் கடிதங்கள் தொடர்புடைய முகவரியில் வாக்காளர்கள் வசிக்காத நிலையில், அஞ்சல் துறையினரால் திரும்ப வரப்பெறுதல், வாக்காளர்களால் அனுப்பப்படும் மறு ஒப்புதல் கடிதம் அடிப்படையில் தொடர்புடைய இருமுறைப்பதிவு பெயர்களில் ஒரு பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.