வேலூர்: 6 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா இளைஞர் கைது!!!!
10/05/2024
0
வேலூர் கோட்டை சுற்றுச் சாலையில் வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகப்படும் நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஒடிசாவைச் சேர்ந்த ஜெயகௌடா என்பதும், ஒடிசாவில் இருந்து வேலூருக்கு விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவரை போலீசார் வடக்கு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
