கோவை: கைவினை கலைஞர்கள் உருவாக்கிய தங்கம் வெள்ளி பொருட்களின் சங்கமம் முதல் முறையாக அறிமுகம் செய்யபட்டுள்ளது!!!

sen reporter
0

 

தங்கை தயாரிப்பில் கை தேர்ந்த கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கைவினை கலைஞர்கள் உருவாக்கிய வெள்ளி பொருட்களின் சங்கமம், கோவையில் முதல்முறையாக அறிமுகம் செய்யபட்டுள்ளது.

கோவை மாவட்டம் ரத்தினசபாபதி புரம் பகுதியில் வில்வா, ஜூவலஸ் எனும் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு  அசல் தங்க நகைகளின் வடிவமைப்புகளை வெள்ளி பொருட்களில் உருவாக்கி, வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி வருகின்றது. இந்த நிலையில் வரும் தீபாவளியை முன்னிட்டு இங்கு பல்வேறு புதிய புதிய வெள்ளியால் உருவாக்க ரத்னா கலெக்ஷன் எனும் புதிய, புதிய வடிவமைப்பு நகைகளை இன்று  அறிமுகம் செய்தது  இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வில்வா ஜூவலஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களானவிஜயகுமார், விஜயலட்சுமி, மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் கூறும் பொழுது... 

கொரோனா தொற்று காலங்களில் அனைத்து மக்களும் பாதிப்படைந்தனர், பின்னர் ஓவ்வொரு துறையாக மீண்டு வந்தது. ஆனால் தங்க நகை வடிவமைப்பு கைவினை கலைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகள் கிடைக்க வில்லை, இவற்றை தடுக்க வேண்டும், என்ற நோக்கத்தில் வெள்ளி பொருட்களை நகை வடிவமைப்புகளில் உருவாக்கி மக்களிடம் கொண்டு சேர்த்தால் மக்கள் ஏற்று கொள்ளுவார்களா என யோசித்து இந்த நகைகளை வடிவமைக்க துவங்கினோம். ஆனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது அதனை தொடர்த்து கடந்த 2020 ம் ஆண்டு இல்கு இந்த நிறுவனத்தை துவங்கியதாகவும், தற்போது இங்கு 4000த்திற்கும் மேற்பட்ட தனித்துவமான வடிவமைப்புகள் உள்ளது, தமிழகத்தின் முதல் வெள்ளி பொருட்களின் சங்கமமாக இந்த நிறுவனம் இடம் பிடித்துள்ளது என்றார். திருமண வைபவங்களுக்காக மணப்பெண்ணுக்கு ஒட்டியாணம், காசுமாலை, நெக்லஸ், காதுமாட்டி, நெத்திசுட்டி, உள்ளிட்ட பல வடிவமைப்புகள் இங்கு தங்க நகைகளைபோல வெள்ளியில் வடிவமைக்கப்பட்டுள்ளது இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றது என்றார். 

மேலும் தற்போது சென்னை, மதுரை, கோவை விமான நிலையம், என பல தரப்பட்ட இடங்களில் தங்களது கிளைகளை அதிக படுத்தி செல்வதாகவும், இதற்க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததே மிகபெரிய காரணம், அதற்காக மக்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக கூறியவர்,வரும் தீபாவளியை முன்னிட்டு ரத்னா கலெக்ஷன்ஸ் எனும் வெள்ளி நகைகளை அறிமுகம் செய்துள்ளதாகவும், மேலும் சிறப்பு தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது, என்றார். தங்கநகைகளை நினைத்து பார்க்க முடியாத நிலையில், அதன் வடிவமைப்புகள் வெள்ளியில் கிடைப்பது வாடிக்கையாளர்களின் பணசுமையை குறைப்பதுடன், அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகின்றது  என்றார். மேலும் தற்போது வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஸ்டார் நடித்த வேட்டையன் திரைப்படத்தின் டிக்கெட்கள் இலவசமாக வழங்குவதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top