தேவையற்ற செலவுகளை கட்டுபடுத்த,சாதாரண மக்களின் நிதி நிர்வாகத்தை மேம்படுத்த FINFRESH எனும் புதிய செயலி கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.உலக அளவில் வங்கி பரிவர்த்தனைகள் டிஜிட்டல்மயமாகிவருவதில், அதிக மக்கள் தொகைஉள்ள இந்தியாவில் பண பரிவர்த்தனைகளை இந்திய மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.
இந்நிலையில் தனி நபர் நிதி நிர்வாகத்தை டிஜிட்டல் முறையில் எளிமையாக்கும் வகையில் (FINFRESH) ஃபின் பிரெஷ் எனும் செயலியை கோவையை சேர்ந்த சண்முக புவனேஷ்வர் எனும் இளைஞர் உருவாக்கி உள்ளார்.கடந்த ஆறு மாதங்களாக செயலியின் மேம்பாடுகள் குறித்து ஆய்வுக்கு பிறகு,ஃபின் பிரெஷ் செயலி அறிமுக விழா கோவை சுப்ரமணியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக எம்.எம்.எஸ்.குளோபல் கண் மருத்துவமனையின் தலைவர் சோமசுந்தரம்,ஓஸாட் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹரீஷ் ராவ்,ஆகியோர் கலந்து கொண்டு புதிய (FINFRESH) செயலியை அறிமுகம் செய்தனர்.தொடர்ந்து செயலியின் பயன்பாடுகள் குறித்த சந்தேகங்களுக்கு பொருளாதார நிபுணர்கள் மற்றும் பங்குச்சந்தை ஆய்வாளர்கள் விரிவாக எடுத்து கூறினர்..
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சண்முக புவனேஷ்வர் தாம் உருவாக்கிய (FINFRESH) செயலி மாத சம்பளம் வாங்கும் நபர்கள் துவங்கி சிறிய மற்றும் பெரிய அளவிலான வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது தனிப்பட்ட நிதி நிர்வாகத்தை இந்த செயலி வாயிலாக எளிமையாக நிர்வகிக்க முடியும் என தெரிவித்தார்.முழுவதும் இந்தியர்களின் நிதி மேலாண்மைகளை ஆய்வு செய்து உருவாக்கப்பட்ட இந்த செயலிவாயிலாகபட்ஜெட், முதலீட்டு திட்டமிடல், மியூச்சுவல் பண்ட் முதலீடு,உட்பட டிஜிட்டல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளியை 10 ரூபாய் முதல் இதில் வாங்க முடியும் என அவர் கூறினார்.குறிப்பாக இதன் வாயிலாக,தனிநபர்கள் தங்கள் நிதியைக்கட்டுப்படுத்தவும், மேம்படுத்தவும் முடியும் என அவர் தெரிவித்தார்.