கோவை: தீபாவளி பண்டிகையை அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்!!!
10/31/2024
0
இன்றைய தினம் தீபாவளி பண்டிகைகொண்டாடப்படுகிறது. மக்கள் பலரும் அதிகாலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடிக்க துவங்கி உள்ளனர். அக்கம்பக்கம் வீட்டார்களுக்கும் நண்பர்களுக்கும் ஒருவருக்கொருவர்இனிப்புகளை பரிமாறி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாடி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக கோவை செல்வபுரம். அடுத்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருக்க கூடிய குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து குடியிருப்பு வளாகத்திற்குள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
