சமீபத்தில், மத்திய அரசு ஒரு ஆன்லைன் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தைசெயல்படுத்துவதற்கான தளமாக செயல்படும், இது ஐந்து ஆண்டுகளில் சுமார் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதும், இளம் தலைமுறையினரின் வேலைவாய்ப்புக்கான பாரதப் பிரதமரின் முயற்சியில் ஒரு பகுதியாகும். இதற்கான பட்ஜெட் செலவு ஆண்டுக்கு சுமார் ரூ.2.1 லட்சம் கோடி ஆகும்.
உலகின் மக்கள்தொகையில் இளைய சமுதாயத்தை அதிகமாகக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும், சராசரியாக 28 வயது நிரம்பியவர்கள். மற்றும் மொத்த மக்கள் தொகையில் 35 வயதுக்குட்பட்டவர்கள் 65% ஆகும். 2024-25 யூனியன் பட்ஜெட்டில் பிரதமரின் வேலைவாய்ப்புக்கானதொகுப்பைஅறிமுகப்படுத்தியதன் மூலம், 2023-24 பொருளாதார ஆய்வின்படி விவசாயம் அல்லாத துறையில் 2030-ம் ஆண்டுக்குள் 78.5 லட்சம் வேலை வாய்ப்புகளை ஆண்டுதோறும் உருவாக்கும் இலக்கை அடைய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம், ஒரு கோடி இளைஞர்களுக்கு 12 மாதங்களுக்கு முதல் 500 சிறந்த நிறுவனங்களில்இன்டர்ன்ஷிப்பை ஐந்தாண்டுகளுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இந்த இன்டர்ன்ஷிப் காலத்தின் போது மாதத்திற்கு ரூ.5000 ஊக்கத்தொகையாக வழங்க நிர்ணயித்திருக்கிறது, அதில் மத்திய அரசு ரூ.4500-ம் மற்றும் மீதமுள்ள ரூ.500-ஐ பயிற்சி தரும் தொழில் நிறுவனமும் வழங்குகிறது. மற்றும் ஒரு முறை உதவியாக ரூ.6000-ம் மத்திய அரசு தரவும் முடிவெடுத்துள்ளது. இந்தத் திட்டம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கும் முதலாளிகள் விரும்பும் நிஜ உலக நடைமுறைதிறன்களுக்கும் இடையே உள்ளஇடைவெளியைக் வெகுவாக குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
2024-25 வருவாய் ஆண்டில் 1.25 லட்சம் இன்டர்ன்ஷிப் வேலைவாய்ப்புகளை இலக்காகக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டத்துடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையிலும் மற்றும் நிஜ உலக அனுபவத்தை இளைஞர்கள் வெளிப்படுத்தும் நோக்கத்துடனும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த முன்முயற்சியின் மூலம், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் திறமையான இளம் பணியாளர்களை அதிக அளவில் உருவாக்குவது, மற்றும் எதிர்கால வேலை சந்தையில் வெற்றிபெறத் தேவையான திறன்களை இந்திய இளைஞர்களை தயார் செய்து அதிகாரமளிக்க இந்திய அரசாங்கம் முயல்கிறது. இறுதியில், இந்தத் திட்டம் திறமையை வளர்ப்பதற்கும், அடுத்த தலைமுறையின் திறனைத் வெளி கொணர்வதற்கும், நாட்டின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் அமையும் என்று நம்பப்படுகிறது.
இந்தத் திட்டம் இந்திய இளைஞர்கள் திறமையான வேலைவாய்ப்பைப் பெறுவதற்குத் தயார்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மக்களின் நிலையான வளர்ச்சியின் பலன்களைப் பெறுவதற்கு அவர்களை நிதி ரீதியாக சுதந்திரமாக செயல்படுவதற்கும் உதவுகிறது. மேலும் வறுமை, பசி இல்லாத நிலை, தரமான கல்வி, ஒழுக்கமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி' மற்றும் தொழிலில் புதுமை மற்றும் உள்கட்டமைப்பு போன்ற நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையவும் உதவும். முக்கியமாக இந்த மத்திய அரசின் நிதியுதவித் திட்டம்இளம்தொழிலாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும், மேலும் இந்தத் திட்டம் தொழில்துறையின் தேவைகளுக்கு இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து தேசத்தின் வளர்ச்சியில் திறம்பட பங்களிக்கவைக்கும் திட்டமாகும்.

