திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர கழக அதிமுக சார்பில் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்!!!
10/19/2024
0
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர கழக அதிமுக சார்பில் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நகர அவைத் தலைவர் ஏ.ஜனார்த்தனம் தலைமையில் நடந்தது. நகர செயலாளரும் கவுன்சிலர் கே.வெங்கடேசன் முன்னிலைவகித்துவரவேற்றார் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன், அமைப்பு செயலாளர்கள் முக்கூர் என்.சுப்பிரமணியன், வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு அதிமுக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், மாவட்ட பொருளாளர் ஆலத்தூர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர்கள் எம்.மகேந்திரன், எம்.அரங்கநாதன், மாவட்ட நிர்வாகிகள் டி.பி.துரை, ஏ.அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், ஜி.கோபால், என்.ரகு, ராணி பெருமாள், வழக்கறிஞர்கள் ஆர்.கே.மெய்யப்பன், எம்.முனுசாமி, கா.புவனேந்திரன், கோவிந்தராஜ், இ.வெங்கடேசன், பி.அருண், எச்.சுரேஷ்குமார், தணிகாசலம், ஏ டி ஆர் செந்தில், பச்சையப்பன், பெருமாள், திருச்சிற்றம்பலம், சுரேஷ், எழிலரசன், ராஜீ, பிரகாஷ், சுதாகர், மகாதேவன், கே.கோபிராஜ், பாலாஜி, தவமணி, பூபதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படவிளக்கம்: செய்யாறில் நகர அதிமுக சார்பில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆலோசனை வழங்கி பேசினார். உடன் மாவட்டச் செயலாளர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், நகர செயலாளர் கே.வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பலர்.
