வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, சித்தூர் வளாகத்தில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் கல்வி அடிப்படையிலான மருத்துவமனையை அமைக்கும் திட்டத்தை இன்று (10ம் தேதி) வெளியிட்டது. அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையுடன் முதன்மையாக மதிப்பு அடிப்படையிலான மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வியை முக்கியமாகபின்தங்கியவர்களுக்கு வழங்குவதற்கான கூட்டு ஒப்பந்தத்தை அறிவித்தது.
சிஎம்சி வேலூருக்கு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ. 500 கோடி மானியத்தை அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை வழங்குகிறது. தற்போதுள்ள 120 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை 422 படுக்கைகள் கொண்ட கல்வி மயமான மருத்துவமனையாக மேம்படுத்தும். மருத்துவக் கல்வியின் முன்னோடியான சிஎம்சி வேலூர் தனது எம்பிபிஎஸ் கல்வியின் தனித்துவமான அம்சங்களை விரிவுபடுத்தவும், இந்தியாவிலுள்ள சுகாதாரத் சேவையில் விரிவடைந்து வரும் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சுகாதாரப் பாதுகாப்பு (PSHC) பகுதியில் கவனம் செலுத்தவும் இந்த மானியம் உதவும் என தெரிகிறது.
இதுதொடர்பாக சிஎம்சி வேலூர் இயக்குநர் டாக்டர் விக்ரம் மேத்யூஸ் கூறுகையில், “எங்கள் சித்தூர் வளாகத்தில் உள்ள புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் கல்வி அடிப்படையான மருத்துவமனையானது, நமது நாட்டின் பொருளாதார, சமூக நெருக்கடிகளை உணர்ந்து பிரதி மாதிரியான பொருத்தமான மருத்துவக் கல்வி, சுகாதார சேவை, ஆராய்ச்சி மற்றும் சமூகப் பணியை வழங்கிட வேண்டும் என்பதே எங்கள் கனவு. 2025 ஆம் ஆண்டில் சிஎம்சி வேலூர் தனது 125 வது ஆண்டு விழாவில் அடியெடுத்து வைக்கும் இந்த பயணத்தில் எங்கள் பணி தொடரும் என்றார்.
