கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆறு மையங்களில் 1866 தேர்வர்கள் இத்தேர்வினை எழுத உள்ளார்கள். தேர்வர்களுக்கு தேர்வுக்கூடங்களில் அடிப்படை வசதிகள், தடையில்லா மின்சாரம் வழங்கவும் மற்றும் பேருந்து வசதிகளையும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்களின் அனுமதி சீட்டில் (Hall Ticket) குறிப்பிட்டுள்ளவாறு தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வுக்கூடங்களுக்கு சரியான நேரத்திற்குள்தேர்வுக்கூடங்களுக்குவரவேண்டும்.தேர்வுக்கூடத்திற்குள்அனுமதிக்கப்படதாமதமாக வருபவர்களை மாட்டார்கள் என மாவட்டஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி:தொழில் நுட்ப பணிகள் தேர்வு ஆறு மையங்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இஆப, அவர்கள் தகவல்!!!!
10/24/2024
0
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் எதிர்வரும் 26.10.2024 (சனிக்கிழமை) அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பணிகள்) தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வினை சிறப்பான முறையில் நடத்த சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
