கோவை: வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி வயதான பெண்மணி படுகாயம், இச்சம்பவம் குறித்து வனத்துறை விசாரணை!!!
10/07/2024
0
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மளுக்குப்பாறை உள்ளது,இந்த பகுதியானது கேரளா பெரியார் புலிகள் காப்பகம் வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு மளுக்கு பாறை உள்ளது, இந்த பகுதி வனப்பகுதி ஒட்டியுள்ள இடம் என்பதால் காட்டு யானைகள்,சிறுத்தை புலி காட்டுமாடு நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும் மளுக்குபாறையில் டாடா காபி சொந்தமான நான்காவது டிவிஷன் பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரி (60) இவர் பகுதியில் தேயிலைதோட்ட பணியாளராக பணிபுரிந்து வருகிறார், இந்நிலையில் மழுக்குப்பாறை பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை கூட்டம் வீடுகளை இடித்து சேதப்படுத்தியது, வயதான ராஜகுமாரியை தந்ததால் குத்தி தாக்கியதில் பலத்த காயமடைந்தார்,இதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் கூச்சலிட்டதால் காட்டு யானை கூட்டம் அடர் வனப்பகுதியில் சென்றது தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டு அணை கூட்டத்தை விரட்டும் பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர், ராஜகுமாரியை வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் பொள்ளாச்சி அரசுதலைமைமருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு கோவை பிஎஸ்ஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,வால்பாறை அருகே காட்டு யானை பெண்ணை தாக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.