கி.ருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் இன்று ஊத்தங்கரையில் அமைந்துள்ள வட்டாரக் கல்வி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய விலையில்லா பொருட்களின் விநியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கே வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்களுக்கான புகார் பெட்டியைத் திறந்து ஆசிரியர்களால் கொடுக்கப்பட்டிருந்த மனுக்களை வாசித்து, கோரிக்கைகளின் தற்போதைய நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு அருகில் உள்ள நூற்றாண்டு கண்ட அரசு தொடக்கப்பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களிடம் தமிழ் எழுத்துகள், ஆங்கில எழுத்துகளை கூறச்சொல்லி, மாணவர்களின் எழுத்தறிவை ஆய்வு செய்தார். அமைச்சரின் இந்த திடீர் ஆய்வு செய்ததால், வட்டாரக் கல்வி அலுவலர்களும், ஆசிரியர்களும் இன்ப அதிர்ச்சி அடைந்தார்கள்.