கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பாக நடைபெற்ற மாநாட்டில் ஒழுக்கமே சுதந்திரம் எனும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது!!!!!

sen reporter
0


 ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,  நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளோடு சமூக நலன்  சார்ந்த  பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை  மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அதிகரித்து வரும்,ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி அகில இந்திய அளவில்  ‘ஒழுக்கமே சுதந்திரம்’ எனும் மையக்கருத்தில் பரப்புரையை மேற்கொண்டனர்.இதன் ஒரு பகுதியாக கோவையிலும் அனைத்து சமயத் தலைவர்கள் ஒன்றினையும் கருத்தரங்கங்கள், பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள், நோட்டீஸ் விநியோகம், இல்லங்களில் சந்திப்புகள், அரங்கக் கூட்டங்கள், தனி நபர் கவுன்சிலிங் வழங்குதல், மாபெரும் கண்காட்சிகள், பேரணி, மனிதச்சங்கிலி, சமூக வலைதள பிரச்சாரம், பள்ளி - கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள், ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல்கள், உறுதி மொழி ஏற்பு நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.இதன் தொடர்ச்சியாக மாநில அளவிலான  மகளிர் மாநாடு கோவை   போத்தனூர் பி.வி.ஜி. மஹாலில் நடைபெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரத் தலைவர்   உமர் ஃபாரூக் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில்    மத்திய மண்டலத் தலைவி சகோதரி கமருன்னிஸா அனைவரையும் வரவேற்று பேசினார்.

தொடர்ந்து, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் - தமிழ்நாடு மற்றும்  புதுச்சேரி மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ  மாநாட்டு சிறப்புரையாற்றினார்.

மனித சமூகம் சிறந்த ஒழுக்க மாண்புகளைக் கொண்டுள்ள வரை மட்டுமே வளர்ச்சியும், மேன்மையும் அடைந்திட முடியும். அவற்றை கடைபிடிக்கும் வரையில் மட்டுமே மனிதகுலம் நிலைகொண்டிருக்கும். மது, போதை, தன்பால் உறவு, திருமணமின்றி சேர்ந்து வாழ்தல் போன்ற தீமைகள் தற்காலத்தில் அதிகரித்து வரும் சூழலில் இறைவழிகாட்டுதல்களை ஏந்தியுள்ள இந்தச் சமூகம் அனைத்து தரப்பு மக்களையும் ஒழுக்க மாண்புகளின் அடிப்படையிலான வாழ்வியலின் அவசியம் குறித்து உணர்த்துவதுடன் அவர்களுக்கான முன்னுதாரணமாக இருப்பதும் நம்மீது கடமை.என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற  மாநாட்டில் , கோவை மாநகராட்சி மேயர்  ரங்கநாயகி ராமச்சந்திரன், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில மகளிர் பிரிவுச் செயலாளர் ஃபாத்திமா ஜலால்,திருச்சி அஸ்ஸலாம் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மௌலவி நூஹ் மஹ்ழரி  அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழு உறுப்பினர்  ஃபாத்திமா முஸஃப்பர் , கிழக்கு மண்டலத் தலைவி  அஸ்மாபீ,கோவை பெருநகரக் கிளையின் பெண்கள் பிரிவுத் தலைவி  ஜஹீனா அஹமது, தெற்கு மண்டலத் தலைவி சலீனா பாரி, கோவை மாநகரத் செயலாளர் சபீர் அலி, மாநாடு பொறுப்பாளர்  பீர் முஹம்மது, மக்கள்தொடர்புச் செயலாளர் அப்துல் ஹக்கீம் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர்  கலந்துகொண்டனர்…

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top