தென்காசி: குத்துக்கல்வலசை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழா நிறைவு!!!
10/13/2024
0
தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாள் சிறப்பு பூஜையில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றது, ஒன்பது நாளும் முத்துமாரியம்மனுக்கு நவநாயகி அம்மன் அலங்காரத்துடன் பூஜையும் மற்றும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது பெண்கள் கொலு பாடல்கள் பாடினர், அதனைத் தொடா்ந்து ஒன்பது நாளும் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது கிராம பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் நவராத்திரியின் சிறப்புகளை பாடல்கள் பாடி தெரிவித்தனர் சரஸ்வதி பூஜை நாளில் மாணவர் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், பென்சில் இலவசமாக வழங்கப்பட்டது இதில் குத்துக்கல்வலசை ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனின் அருள் பிரசாதத்தை பெற்று சென்றனர் திருவிழாவின் ஒன்பது நாட்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது குழுவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொம்மைகள் வழங்கி சிறப்பு செய்தனர் கோயில் நிர்வாகத்தினர் மிகவும் சிறப்பாக விழாவை நடத்தினர் நிறைவு நாளை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து இறையருள் பெற்றனர் முத்து மாரியம்மன் சிவன் விநாயகர் அலங்காரத்தோடு காட்சியளித்தது மெய்சிலிர்க்கச் செய்தது.
