கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், மூன்றாம்பட்டி ஊராட்சி, கேத்துநாயக்கன்பட்டி கிராமம், இலங்கை வாழ் தமிழர் முகாமில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் திட்டத்தின் கீழ், ரூ.5 கோடியே 53 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் 96 இலங்கை தமிழர் குடியிருப்பு கட்டுமான பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், ரூ.2 கோடியே 22 இலட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.நாசர் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று துவக்கி வைத்தனர்.
உடன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.கோபிநாத், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தே.மதியழகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி.மணிமேகலை நாகராஜ், ஒன்றிய குழு தலைவர் திருமதி.உஷாராணி குமரேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

